• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கிளைகள் முறிந்து வீடு மற்றும் நீர் தேக்க தொட்டிகளில் விழுந்த மரங்கள்..,

ByP.Thangapandi

Jun 2, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த கனமழை காரணமாக திடியன் கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் வீடுகள் மற்றும் நீர் தேக்க தொட்டிகள் மீது விழுந்து சேதமடைந்தன.,

ஆங்காங்கே மின்கம்பங்களும் சேதமடைந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.,

இது குறித்து தகவலறிந்த உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் நேரில் ஆய்வு செய்து வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் முதற்கட்ட நடவடிக்கையாக வீடுகள் மற்றும் நீர் தேக்க தொட்டிகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புற படுத்துமாறும், சேதமடைந்த பகுதிகளை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.,