• Wed. May 8th, 2024

கணவர் லாக்கப் சாவுக்கு காரணமான காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்ய மனைவி டிஐஜி- யிடம் மனு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்பட்டாம்பாக்கம் அருகே உள்ள பி.என்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இறந்த சுப்பிரமணியம் மனைவி எஸ்.ரேவதி என்பவர் 31/1/24 புதன்கிழமை அன்று விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி)அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை காவல்துறை துணைத் தலைவர் டிஐஜி திஷா மிட்டலிடம் கொடுத்தார்.

அந்த மனுவில் கடந்த 2015 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், நெய்வேலியில் ஒரு வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் சந்தேக விசாரணை என்ற பெயரில் அந்த சம்பவம் நடந்த பக்கத்து வீட்டில் பெயிண்டர் வேலைக்கு சென்று வேலை பார்த்து, சம்பவம் நடந்த அன்று பெயிண்ட் வேலைகக்குசெல்லாமல் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்று வந்த எனது கணவர் சுப்பிரமணியத்தை அழைத்துச் சென்ற போலீசார் அவரை காவல் நிலைய லாக்கப் பில் வைத்து அடித்து, விரல் நகங்களை பிடிங்கி சித்திரவதை செய்ததின் பேரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை போலீசாரால் அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றவர் உயிரிழந்தார்.

அது குறித்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து, உயர் நீதிமன்ற அறிவுறுத்தல் பேரில் வழக்கு விசாரணை வரும் 1/2/24 முதல் 5/3/24 வரையில் கடலூர் மாவட்ட எஸ்சி.எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் எனது கணவர் உயிரிழப்புக்கு காரணமான ஏ1 குற்றவாளி ராஜா என்ற காவல் ஆய்வாளர், தற்போது கடலூர் மாவட்டம், நெய்வேலி காவல் உட்கோட்ட வடலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார், அவர் பணியாற்றும் அதே காவல் உட்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் பலர் அரசு தரப்பு சாட்சியங்களாக சாட்சியம் அளிக்க உள்ள நிலையில் அவர் அங்கு பணியாற்றி வந்தால் சாட்சியங்களை மிரட்டி கலைக்க வைக்க முயற்சி செய்வார், என்பதால் அவரை உடனடியாக வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் ரேவதி தெரிவித்துள்ளார்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ் ஜி ரமேஷ் பாபு மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி ஆறுமுகம் வழக்கறிஞர்கள் , ஜோதிலிங்கம் லெனின். மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மேரி ஆகியோர் உடன் இருந்தனர்,

இவ்வழக்கின் எதிரிகளான ஏ1 ராஜா. கடலூர் மாவட்டத்தில் வடலூர் காவல்நிலைய ஆய்வாளராகவும். ஏ2-கே..என்.செந்தில்வேல் காஞ்சிபுரம் மாவட்டம். திருக்கழுக்குன்றத்தில் உதவி ஆய்வாளராகவும், ஏ3 ஜே. செளமியன், கடலூர் மாவட்டம். கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் தலைமை காவலராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வழக்கில் உள்ள 3 எதிரிகளும் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *