• Tue. Apr 22nd, 2025

விழுப்புரம் கோடி தெரு மருதூரியில் கஞ்சா விற்பனை

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை. உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் முதல் நிலைக் காவலர்கள் ‌ வெங்கடசாலம், பாலசுப்ரமணியன், சங்கர், ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை குழுவினர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடி தெரு மருதூரியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர், அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருள் ஒரு வீட்டியில் வைத்து இருந்ததை தனிப்படை போலீசார் கண்டு பிடித்து, அந்த இருந்த ஒரு பெண்ணை அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . விசாரணையில் குற்றவாளியான சுசிலா கணவர் மணி கோடி தெரு,மருதூர், விழுப்புரம்,இவரின் மகன் அன்பரசன்-21 தகப்பனார் மணி (தப்பித்து ஓடி விட்டார் ), விசாரணையில் தெரியவந்தது, மேலும் அவர்வைத்து இருந்த கஞ்சா போதை பொருள்கள் சுமார்- 650 கிராமை போலீசார் பறிமுதல் செய்தனர்.