ஆரோக்கியமான எதர்கால சந்ததிகளை உருவாக்கும் சக்தி ஆசிரியர்களுக்கு மட்டுமே இருப்பதாக தஞ்சை பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கலை அறிவியல் கல்லூரி சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது..கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் .தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சை பல்கலைகழக முன்னால் துணை வேந்தர் டாக்டர் சி.சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், சமூகத்தில் மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கவதே ஆசிரியரின் தலையாய கடமை என குறிப்பட்ட அவர்,. ஆசிரிய பணியின் பல்வேறு அர்ப்பணிப்புகள் குறித்து பேசினார்..ஆரோக்கியமான எதர்கால சந்ததிகளை உருவாக்கும் சக்தி ஆசிரியர்களுக்கு மட்டுமே இருப்பதாக புகழாரம் சூட்டினர். விழாவில், கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை சேர்ந்த தனியார் பள்ளி,,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில் தமிழ்மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொருளாதாரம், வணிகவியல் என பல்வேறு துறை சார்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு விருதுகள் பெற்றனர்.