
அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திகை மிக மோசமாக கருத்தை கூறிய கம்பீர்
தமிழ்நாடு வீரரும், அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் கடும் போராட்டத்திற்கு இடையே உலகக்கோப்பையில் இடம்பிடித்தார். திடீரென தினேஷ் கார்த்திக் பற்றி வெறுப்பு கருத்தைக் கூறினார் கம்பீர். ஏன் அவரை உலகக்கோப்பையில் தேர்ந்தெடுத்தீர்கள்? என்று மட்டும் தான் கேட்கவில்லை. “வெறும் 10-12 பந்துகள் மட்டும் பேட்டிங் ஆடும் வீரரை நீங்கள் எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்? எந்த வரிசையிலும் பேட் செய்யும் தகுதி ரிஷப் பண்ட்டுக்கு உள்ளது. என்னை பொறுத்தமட்டில் பண்ட் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருக்கவேண்டும்” என வெளிப்படையாக கூறியுள்ளார். தமிழ்நாடு வீரரா? இல்லை, கம்பீருக்கும்- தினேஷ் கார்த்திக்குக்கும் தனிப்பட்ட சண்டையா? இல்லை வேறு எதுவும் பிரச்சனையா? ஐபிஎல் அணியில் கொல்கத்தா கேப்டன்ஷிப் தொடர்பாக எதுவும் கிளைமேக்ஸ் உள்ளதா? எனத் தெரியவில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் பற்றி மிக மோசமாக சாடியுள்ளார் கம்பீர்.
