
கமலுக்கு பதிலாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகியதை தொடர்ந்து ஐந்து சீசன்கள் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலரை தேர்வு செய்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
மூன்று வாரங்களாக இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது அதில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முதலில் பங்கேற்பதில் இந்த நிகழ்ச்சியால் இடையூறு ஏற்படுவதால் இதிலிருந்து விலகிக் கொள்வதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசன் தொகுத்து வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. .
கமலுக்கு பதிலாக பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் இரண்டு எபிசோடை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியது போல இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் அவர்தான் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய போது பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரண்டு விதமான கருத்துக்கள் பரவின. இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நடுவர்களுக்கும் வனிதா விஜயகுமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவர் வெளியேறினார். அப்போது நடுவராக ரம்யா கிருஷ்ணன் தான் இருந்தார்.
இப்படியான நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால், வனிதாவுக்கும் இவருக்கும் எப்படி ஒத்து வரும் என்று கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
