• Fri. Apr 19th, 2024

இலங்கையின் அடுத்த பிரதமர் யார்?

ByA.Tamilselvan

May 12, 2022

இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களின் தொடர் போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்த பிரமர் பதிவியிலிருந்து ராஜபக்சே ராஜினாமா செய்தார். ஆனால் அதிபர் பதிவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யவில்லை. இந்நிலையில் அதிபர்கோத்தபய ரணில் விக்கிரமசிங்கேயுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.அடுத்த பிரதமராக ரணில் பதிவேயேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது பிரதமர் பதவியை ஏற்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார். இலங்கையில் இடைக்கால அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவியை ஏற்று நடத்தத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேலும், 4 நிபந்தனைகளுடன் ஆட்சதிப் பொறுப்பேற்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக, குறுகிய காலத்திற்குள் பதவி விலக அதிபர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சஜித் பிரேமதாசா பிரதமர் பதவி ஏற்க தயார் என்று அறிவித்துள்ளார்.
எனவே இலங்கையின் அடுத்தபிரதமர் ரணில்விக்ரமசிங்கேவா அல்லது சஜிபிரேமதாசாவா என்பது ஒருசில நாட்களில் தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *