இன்றைய காலகட்டத்தில் ஏராளமானவர்கள் துரித உணவுகளை விரும்பி சாப்பிட ஆரம்பித்துள்ளனர். பண்டைய கால உணவு பழக்க வழக்கங்களை மறந்து தற்போது பாஸ்ட் புட் பழக்கத்திற்கு மாறியுள்ளனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை துரித உணவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகிறது. இருப்பினும் அதை தான் விரும்பி உண்கின்றனர்.எந்து தெரு முக்கில் நின்றாலும் அங்கு துரித உணவுக் கடை தற்போது அவசியமாயிற்று. அந்த அளவிற்கு துரித உணவின் மோகம் மக்களிடையே பெருகி கிடக்கஇறது. இப்படி சாப்பிடுவதற்கு நாம் பல ஆயிரங்கள் செலவழிப்போம். ஆனால் இதுபோல் துரித உணவை டேஸ்ட் பண்ண 1 லட்சம் சம்பளம் என்றால் சம்மாவா இருப்போம்…ஆம் பிரபல உணவகங்களில் உணவு ருசி பார்க்கும் வேலைக்கு ஆட்களை தேடி வருகிறார்கள். இந்த Takeway tester வேலைக்கு மெட்டீரியல்ஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் மாதம் ஒரு 1 சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது. மெக்டொனால்ட், சப்வே போன்ற துரித உணவகங்களின் உணவுகளை ருசி தரம், டிமாண்ட், திருப்தி என பலவற்றை குறித்தும் சாப்பிட்டு பார்த்து முடிவு செய்வதுதான் வேலையேவாம். அடேயப்பா… இதுவும் நல்லாதாந் இருக்கு…!