• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

பீஸ்ட் புரோமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் இவரா?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு ஹிந்தி, மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி மாலை 6-மணிக்கு வெளியாகிறது. இப்படத்திற்கு இசையை வெளியிட்டு விழா நடைபெறாமல் புரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சன் டிவி ஒளிபரப்பு செய்யும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இரவு ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

இந்நிலையில், தளபதி விஜய் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது, இயக்குனர் நெல்சன் திலிப்குமார் என தற்போது சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.