அஜித் நடிக்கும் ஏ.கே.61 படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் அஜித், ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படம் மணி ஹெய்ஸ்ட் வெப் தொடர் பாணியில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஆக்ஷன் காட்சிகளே இருக்காது என கூறப்படுகிறது.
அஜித் தனது 61வது படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு கேரளாவில் பாலக்காடு பகுதியில் அமைந்துள்ள கல்பாத்தி விஸ்வநாதர் கோயிலுக்கு வெள்ளை வேட்டி, வெள்ளை துண்டு அணிந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்று சாமி தரிசணம் செய்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகின.
இதையடுத்து, கேரளாவில் இருக்கும் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அஜித் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியானது எனிலும் அந்த தகவல் உறுதியாகவில்லை. இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மருத்துவர்கள் உன்னி கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவரும் நன்றி கூறி, இந்த கடிதத்தை எழுதியுள்ளார் அஜித். மேலும், அவர்களுடைய, குரு க்ரிப்பா டீமுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.