• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

யாருக்கு எந்த நேரத்திலும் மரணம் வரலாம் – அதிர்ச்சி வீடியோ

ByA.Tamilselvan

Nov 26, 2022

இளம் வயது பெண் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் யாருக்கும் எந்த நேரத்திலும் மரணம் வரவாம் என்பதை உணர்த்தும் அதிர்ச்சி விடியோ
கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே ஹவாஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்னா லூயிஸ் (23). இவர், உடுப்பி மாவட்டம் பிரம்மவர் தாலுக்கா, கோலலகிரி அருகே உள்ள ஹவாஞ்சே என்ற இடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில் அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


அதே சமயம் இறப்பிற்கான காரணம் என்று பார்க்கும் போது மாரடைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோஸ்னாவுக்கு எந்த நோயும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். சமீப நாட்களில், குறிப்பாக கொரோனாவுக்குப் பிறகு, ஆரோக்கியமானவர்கள் கூட திடீரென சரிந்து இறந்து போவதாக நாடு முழுவதும் தகவல்கள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.