• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அடுத்த இரண்டு நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்… வானிலை மையம் சொன்னது என்ன?

By

Aug 19, 2021

தமிழ்நாட்டின் வட கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இச்சூழலில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரையிலும் சில சமயங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக் கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.