• Fri. Apr 26th, 2024

புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்!..

By

Aug 19, 2021

சென்னை மாநகரை பசுமையாக்க ஆண்டுக்கு இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையர் ககந்தீப்சிங் தெரிவித்துள்ளார்.

உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜிவ்காந்தி சாலை கூவம் ஆற்றின் கரையோரத்தை பசுமமையாக்கும் வகையில் மாநகராட்சி ஆணையர் ககந்தீப்சிங் பேடி மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.


புகைப்படக் கலைஞர்கள் மரக்கன்றுகளை நடுவதை ஆணையர் கேமராவில் படமெடுத்து அவர்களை கவுரவப்படுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு இரண்டு லட்சம் மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.இதனால் பசுமையும்,சுத்தமான காற்றும் குளிர்ச்சியும் கிடைக்கும் என்றார். திருவனந்தபுரம்,பெங்களூருவில் அதிகளவு மரங்கள் இருப்பதைப் போன்று சென்னையிலும் காலியாக உள்ள இடங்களில் பொதுமக்கள் பங்களிப்புடன் மரங்கள் வளர்க்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *