பாஜகவின் வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் வருமானம் உயரவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், கடந்த 2019-20 தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருமானம் 50% அதிகரித்துள்ளது. அதோடு, அதன் வருமானம் ரூ.3,623.28 கோடியாக உள்ளது. ஆனால், பாஜகவின் வருமானம் உயர்ந்தாலும்,மக்களின் வருமானம் உயரவில்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.