• Fri. Mar 29th, 2024

கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்? உலக சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் முடிவுக்கு வருவது குறித்து உலக சுகதாரத்துறை சில அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளது. கோவிட்-19 குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப முன்னணி டாக்டர் மரியா வான் கெர்கோவ், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முடிவு இன்னும் வெகு தொலைவில் உள்ளது.

கொரோனாவின் அடுத்த மாறுபாடு ஒமிக்ரான் விட மிக வேகமாக பரவக்கூடிய தொற்றுநோயாக இருக்கும். கொரோனாவின் கடைசி மாறுபாடாக ஒமிக்ரான் இருக்காது. எதிர்கால மாறுபாடுகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கடுமையானதாக இருக்கலாம்.
எதிர்காலத்தில் உருமாறும் கொரோனா மாறுபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தியை எளிதில் தவிர்க்கலாம். கொரோனா வைரஸின் புதிய பதிப்பை எதிர்த்துப் போராடுவதில் தடுப்பூசிகள் குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கலாம்.

இதனால் கோவிட் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மற்றும் முகக்கவசம் அணிவது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

முகக்கவசங்கள் அணிவதன் மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடிகிறது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை முகக்கவசம் குறைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *