• Sat. Apr 27th, 2024

இஸ்லாமியர்களை ஒடுக்கப்பட்டவர்களாக அடையாளப்படுத்துகிறார்கள்! – ஆல்- இந்திய இமாம் கவுன்சில் அமைப்பினர்

Byகுமார்

Feb 10, 2022

நாட்டில் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் வகையிலான பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது, இஸ்லாமியர்களை ஒடுக்கப்பட்டவர்களாக அடையாளப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது ஆல்- இந்திய இமாம் கவுன்சில் அமைப்பினர் பேட்டி

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அரபிக்கல்லூரி முதல்வர் முஸ்தபா கமால்தீன் பேசியபோது :

தேர்தலை முன்வைத்து மக்கள் மத்தியில் இனவேறுபாட்டை உருவாக்கும் வகையில் உத்ரகண்ட் மாநிலம் ஹரித்துவார் கூட்டத்தில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என சங்க பரிவார்கள் அமைப்பினர் வெளிப்படையாக அறிவிப்பு விடுத்துள்ளது குறித்து அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளதோடு நாடாளுமன்றத்திலும் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இந்த பேச்சுக்கு ஆல்-இந்திய இமாம் கவுன்சில் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துகொள்கிறோம் எனவும்

கர்நாடகாவில் நடைபெறும் ஹிஜாபிற்கு எதிரான போராட்டத்தை கவலையோடு கவனித்துகொண்டு இருக்கிறோம், பெண்களுக்கு உரிமை, சொத்து உரிமை வழங்கியது இஸ்லாம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறையிலும் முன்னேறி வரும் காலகட்டத்தில் பள்ளி கல்வியை தடுக்கும் நோக்கில் ஹிஜாப் போராட்டம் முன்னிறுத்தப்பட்டுவருகிறது எனவும்,

இஸ்லாமியர்களை ஒடுக்கப்படுத்தப்பட்டவர்களாக அடையாளப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது இது கண்டனத்துக்குரியது.

ஹிஜாப் முக்கியத்துவத்தை சகோதர சமுதாயத்தவர்களும் வரவேற்க தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இஸ்லாமியர்களின் கல்வியை தடுக்கும் நோக்கில் கர்நாடகாவில் முயற்சி நடைபெறுகிறது, இனப்படுபடுகொலைக்கான முன்னோட்டம் போல உள்ளதோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது

பாபர் மசூதி இடிப்பிற்கு பின்பாக நடைபெறக்கூடிய பல்வேறு கவலைக்குரிய சம்பவங்கள் அதனை உணர்த்துகிறது. எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை ஜனநாயக சக்திகளுக்கு உள்ளது

பாபர் மசூதி இடிப்பிற்கு பின்பாக பல்வேறு பிரச்சனைகளை உருவாகியுள்ளது, எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டியது ஜனநாயக அமைப்புகளின் கடமை.

ஹிஜாப் விவகாரத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் பாராட்டுதலுக்குரியது திருமாவளவன் போன்றோர் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்போம் எதிராக இருந்தால் சட்டரீதியான முயற்சிகளை முன்னெடுப்போம்

இதனை தொடர்ந்து பேசிய ஆல்.இந்திய இமாம் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் அர்ஷத் அஹமது அல்தாஃபி பேசியபோது :

ஆர்.எஸ்.எஸ். பாஜகவிற்கு எதிராக பேசினால் குரல்வளையை நெறிக்கும் நிலையை உள்துறை செய்துவருகிறது எனவும், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளை முடக்க நினைக்கிறது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்றவைகள் நாட்டிற்கு எதிரானது. என்பது போன்று சித்தரிக்கின்றனர், இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்க்க மக்களோடு கைகோர்த்து மக்கள் சக்தியை ஒருங்கிணைப்போம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *