

மதுரை விமான நிலையத்தில் இபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணியில் இணைந்த பெண்கள்; அழுத குழந்தை ரூபாயை பார்த்ததும் ஆப் ஆயிட்டான்; குழந்தைக்கு காசு கொடுத்து விட்டு ஓபிஎஸ் கலகலப்புப்பேச்சு..,
சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியில் இபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுரை ஆரப்பாளையம் ஒன்றாம் பகுதி மாணவரணி செயலாளர் லட்சுமணன் தலைமையில் மகளிர் அணியை சேர்ந்த சாந்தி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.
தனது அணிக்கு வந்தவர்களை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார்.
அப்போது அங்கு இருந்த ஒரு தொண்டரின் குழந்தைக்கு ஓபிஎஸ் கையில் 500 ரூபாய் கொடுத்தார். அதுவரை அழுத குழந்தை அதன் பின் அழுகையை நிறுத்தியதால் ரூபாயை பார்த்ததும் ஆப் ஆயிட்டான் என்று ஓபிஎஸ் கூறியதும் தொண்டர்கள் கலகலப்பாக சிரித்தனர்.
