

சத்துணவுத்திட்ட பெயர்பலகையை அகற்றுவதால் எம்.ஜி.ஆரின் புகழை அழித்துவிடமுடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க.சார்பாக நாடாளுமன்றதேர்தல் பூத்கமிட்டி அமைக்க ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பேரூர்செயலாளர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,கள் கருப்பையா, மாணிக்கம், மாவட்டபொருளாளர் திருப்பதி, முன்னாள்பேரூராட்சிதுணைத்தலைவர் சோனை, ஒன்றியசெயலாளர் காளிதாஸ், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, மாவட்ட துணைச்செயலாளர் லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவை துணை செயலாளர் சந்தனதுரை வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாவட்டசெயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.- ஒரேநாடு ஒரேதேர்தல் என்று பலகட்ட ஆய்வுகளுக்குபின் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவித் தலைமையில் 8பேர்கொண்ட குழுஆய்வு செய்து அந்த ஆய்வறிக்கையை நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்கள் அங்கு இருஅவைகளிலும் விவாதித்தபின் சட்டத்தை நிறைவேற்றிவிட்டால்; அது தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தியாவில் உள்ளஅனைத்து மாநிலங்களுக்கும் செல்லும் என்பது முத்துவேல்கருணாநிதிஸ்டாலினுக்கு தெரியாதா அறியாமையில் புலம்புகிறார். முதல்வராக இருந்தும் கூட இது தெரியவில்லை என்பது வேதனையாக உள்ளது. திருமணவீட்டில் மணமக்களை வாழ்த்த வந்தவர் மாலையும் கழுத்துமாக காத்திருக்கும் வேளையிலே மணமக்களை வாழ்த்தாமல் ஆட்சி பறிபோகிவிடுமோ என்ற பயத்தில் தனது கவலை பகிர்ந்துகொண்டார் பாவம் மணமக்கள். ஆட்சி அதிகாரம் போய்விட்டால் என்னசெய்வது என்று கவலையோடு பேசியிருக்கிறார். எப்போது எல்லாம் தி.மு.க.ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் ஆட்சி அற்பஆயுசிலே கவிழ்ந்துவிடும் என்பதுதான் கடந்த கால வரலாறு. அது கருணாநிதிகாலத்திலிருந்து தொடர்கிறது. அது தற்போது மு.க.ஸ்டாலின் காலத்திலும் தொடர இருக்கிறது. வாரிசுஅரசில்வாதியான உதயநிதியோ திடீர் என்று ஞானஉதயம் பிறந்தவராக சமூகநீதிக்கும் சமத்துவத்துக்கும் இது சனாதானம் என்று சொல்லுகிறார். நான் கேட்கிறேன் இந்த தமிழகத்தி;லே சனாதானத்தை முழுமையாக படித்தவர்கள், அறிந்தவர்கள், தெரியந்தவர்கள், புரிந்தவர்கள், கடைபிடிப்பவர்கள் யாரவது இருக்கிறார்களா என்று சொன்னால்அதற்கு கேள்விகுறிதான் மிஞ்சும். பழக்கவழக்கத்தையும் மரபுகளையும் ஒப்பிட்டுபேசுவது என்பது அது கருத்துக்குகருத்துமோதல்கள் ஜனநாயக நாட்டிலே வரவேற்ககூடியது பாராட்டகூடியது. ஆனால் உதயநிதிஸ்டாலின் தன்னை தலைவராக நிலைநிறுத்தி கொள்வதற்காக மாற்று கருத்துள்ளவர்களை எதிர்க்கமாட்டோம் அதை அழிப்போம் என்று சொல்லுகிற ஒரு சர்வாதிகாரபோக்கில் பேசியிருப்பது தமிழ்நாடு முழுவதும் இன்று கொந்தளிப்பை ஏற்படுத்தி தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி காலத்திடங்களை அரசியல் கால்புணர்ச்சி காரணமாக தி.மு.கஆட்சியில் ரத்து செய்யப் பட்டுள்ளது. சத்துணவுதிட்டம் தந்த சரித்திர நாயகன் என்று எம்.ஜி.ஆர் என்று ஐக்கிய நாட்டு சபையில் சொல்வார்கள். தி.மு.க இன்று காலஉணவுதிட்டம் கொண்டு வருவதில் எந்தவிதஆட்சேபனையும் இல்லை மாணவர்கள் பயனடைகிறார்கள் என்றால் அதை வரவேற்போம். ஆனால் 1வகுப்பு முதல் 5வகுப்புவரை கொடுப்படுகிறது. ஆனால் சத்துணவு 1வகுப்பு முதல் 10வகுப்புவரை கொடுக்கப்படுகிறது இதில் 6வகுப்புமுதல் 10வகுப்புவரை காலை உணவு யார்கொடுப்பார்கள் எதற்கு இந்த வேறுபாடு காலைஉணவுதிட்டத்தை அமுல்படுத்தும் போது ஒரே மாதிரியாக அமுல் படுத்த வேண்டும். இதனால் குழப்பம் ஏற்படுகிறது சத்துணவு திட்டம் நிறுத்தப்பட்டு விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது. காரணம் சத்துணவு திட்டபோர்டுகள் அகற்றப்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆர்.திருப்பெயரை தங்கிய பெயர் பலகைகளை அகற்றிவிட்டு காலை உணவுதிட்ட பெயர்பலகை வைப்பதனால் எம்.ஜி.ஆர்.புகழை எந்தகாலத்திலும் யாராலும் அழிக்கமுடியாது அது இதயத்தில் ஊறிபோய்உள்ளது ரத்தத்தில் கலந்துபோய் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் சூர்யா, வெங்கடேஸ்வரி, பிரியதர்ஷினி, பஞ்சவர்ணம், கீதா, 18வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.
