

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்படுவது குறித்து தோப்பூர் காசநோய் மருத்துவமனை எய்ம்ஸ் அலுவலக கட்டிடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தென் தமிழக மக்களின் கனவு திட்டமான மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்கு முன்னதாக உள்ள தோப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள எய்ம்ஸ் திட்ட அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர்.அனுமந்த் ரெட்டி, இணை இயக்குனர், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

