8 வருடங்களுக்கு பின்னர் நடிகை சமந்தாவை சந்திக்கின்றேன் என காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டரில் பதிவு செய்து உள்ளார்.
விஜய் நடித்த கத்தி திரைப்படத்தின் போது சமந்தாவை சந்தித்ததாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சந்தோஷமான நிகழ்வுகளை மிஸ் செய்கிறேன் என்று நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். மேலும் சமந்தாவுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவு செய்த சமந்தாவின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.