• Fri. Mar 29th, 2024

என்னது.. ஒரு ஊசியோட விலை 10 இலட்சமா?

Byமதி

Dec 17, 2021

800 ஆண்டு பழமையான நான்கு இன்ச் அளவு நீளமும், 4 கிராம் எடையும் உள்ள உடை ஊசியை, 44 வயதுள்ள டேவிட் எட்வெர்ட்ஸ் என்ற நபர் தனது நிலத்தில் கண்டுபிடித்துள்ளார்.

பொதுவாக வீடு கட்டும் போதோ அல்லது நிலத்தை சாதாரணமாக தோண்டும் போதோ ஏராளாமான புதையல்கள் சில சமயங்களில் கிடைப்பதுண்டு. இது போன்ற ஒரு சிறப்பான நிகழ்வு தான் இவருக்கும் நடந்துள்ளது. இவர் எதர்ச்சையாக தனது நிலத்தை தோண்டி கொண்டிருக்கும் போது மிகவும் விலை உயர்ந்த பழங்கால பொருள் ஒன்றை கண்டெடுத்துள்ளார்.

வடக்கு வேல்ஸ் நகரத்தில் உள்ள தனது நிலத்தில் டேவிட் தோண்டி கொண்டிருக்கும் போது 800 வருட பழமையான தங்க உடை ஊசியை கண்டெடுத்துள்ளார். இதன் மதிப்பு 100,000 யூரோவாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடியை இது தாண்டுகிறது. இந்த உடை ஊசியை ஆய்வு செய்த நிபுணர்கள் இதில் மரகத கற்கள் பதிந்த உடை ஊசி என்பதை கண்டறிந்து கூறியுள்ளனர்.

இப்படியொரு பழமையான பொருளை கண்டுபிடித்ததை தன்னால் நம்பவே முடிவதில்லை என்றும், இது போன்ற ஒரு அதிர்ஷ்டமான ஒன்றிற்காக தான் இவ்வளவு நாள் தான் காத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன் அவரது நிலத்தை ஒரு முறை தோண்டிய போது அதில் வெள்ளி உடை ஊசியை கண்டெடுத்துள்ளார். அதுவும் இதே போன்று தான் இருக்கும் என்று டேவிட் குறிப்பிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *