• Fri. Apr 19th, 2024

பாஜக அரசு 30 வருடம் கழித்து சாதிக்க நினைத்ததை தமிழ்நாடு அரசு இப்போதே சாதித்துவிட்டது – கனிமொழி பேச்சு

Byஜெ.துரை

Jan 17, 2023

பிஜேபி ஒன்றிய அரசு 30 வருடம் பொறுத்து சாதிப்போம் என கூறியதை தற்போது தமிழ்நாடு இப்பொழுதே சாதித்து கடந்து விட்டது என சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கனமொழி எம்.பி.பேச்சு.
திமுக சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடபழனி பஜனை கோயில் தெருவில் திமுக 131 ஆம் வட்ட கழக செயளாலர் தட்சன் ஹரிஹரன் தலைமையில் சென்னையில் ஒரு கிராமத்து பொங்கல் என்ற அமைப்பில் பாரம்பரிய கலைகளுடன் கூடிய பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி ,சென்னை தென்மேற்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த.வேலு ,தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக துணைப்பொதுச்செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி:-
உலகமே பின் செல்லக்கூடிய இந்த உழவு திருநாளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கக் கூடிய இந்த வேளையிலே நாம் சில பேருக்கு நன்றியையும் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.மேலும் நம் நன்மைக்கு எதிராய் நிற்ப்பவர்கள் எதிர்கட்சி என்று ஆகிட முடியாது எனவும் குறிப்பிட்ட அவர்,இந்த பொங்கலில் தமிழர்களின் சுயமரியாதை உணர்வுகளை முன்னுக்கு கொண்டு வந்து நிறுத்தி தமிழ்நாடு என்று பெருமையோடு சொல்லக்கூடிய திராவிட மாடல் அரசு என்பதை சொல்வதற்கு சில பேருக்கு பயமா இருக்கலாம் எனவும் தெரிவித்தார். இந்தியாவை தாண்டி வளர்ந்து இருக்கக்கூடிய நாடுகளில் அந்த அந்த ஊர்களில் இருக்கக்கூடிய வாழ்க்கை தரத்தை எட்டி தொட்டுக் கொண்டு நிற்கக்கூடிய ஒன்றுதான் திராவிடம் மாடல் ஆட்சி.
கல்வியாக இருக்கட்டும் அங்கு இருக்கக்கூடிய பிஜேபி ஒன்றிய அரசு 30 வருடம் பொறுத்து சாதிப்போம் என கூறியதை தற்போது தமிழ்நாடு இப்பொழுதே சாதித்து கடந்து விட்டது என தெரிவித்தார்.மேலும்,வளர்ந்த நாடுகளில் கூட டாக்டர்கள் சந்தித்து வைத்தியம் பார்த்துக்கொண்டு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடு தேடி வந்து கதவை தட்டி மருத்துவ வசதிகளை செய்யக்கூடிய ஆட்சி திராவிட மாடல் அரசு எனவும் குறிப்பிட்டார். இந்த சாதனைகளை எல்லாம் செய்து விட்டோம் என்று நாம் மகிழ்ச்சியாக இருந்த அந்த நேரத்திலே நம்மை மறுபடியும் கூர்த்திட்டி விட்டு இருக்கிறார்கள் சில பேர் அவர்களுக்கு இந்த பொங்கலிலே தமிழ்நாட்டு மக்களின் பொங்கல் வாழ்த்துக்களை உங்கள் சார்பிலே தெரிவித்துக் கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *