அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது பெரியப்பாவும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை நேரில் சந்தித்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்துள்ளார் .அப்போது அவரது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது தனது பெரியப்பாவின் காலில் விழுந்து உதயநிதி ஆசி பெற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து அழகிரி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, உதயநிதி ஸ்டாலின் வந்து பார்த்தது பெருமையாக இருக்கிறது என்றார். மீண்டும் திமுகவில் இணைவீர்களா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அதற்கு அவர்களைதான் கேட்க வேண்டும் என்று மு.க.அழகிரி கூறினார்.