• Fri. Apr 19th, 2024

நீட் மசோதாவை மீண்டும் அனுப்பினால் என்ன நடக்கும் ?

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் தமிழக அரசு சட்டசபையில் மீண்டும் நீட் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் என்ன செய்ய வேண்டும்?
என்பது குறித்து அரசியல் சாசனம் தெளிவாக விளக்குகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ‘நீட்’ தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தினார்.

மேலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்த பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தங்களது ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது. இதில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என்பது தெரியவந்தது. மேலும், தமிழக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தமிழக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், தமிழக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட்டது. இந்த மசோதா தமிழக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது அல்ல என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி உள்ளார். இந்த நிலையில் தமிழக அரசு சட்டசபையில் மீண்டும் நீட் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இப்படி மசோதாவை ஆளுநருக்கு அனுப்பும் பட்சத்தில் அவர் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி இந்திய அரசியல் சாசனத்தின் 200-ம் பிரிவு தெளிவுபடுத்துகிறது.

அந்த அரசியல் சாசனத்தில் கூறுவது இதுதான்:- சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற அதை ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதை பெற்றுக்கொள்ளும் ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதாக அறிவிக்க வேண்டும். அல்லது ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்க வேண்டும் அல்லது குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக அனுப்பி வைக்க வேண்டும்.

ஆளுநரிடம் மசோதா அளிக்கப்பட்ட பிறகு, அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆளுநர் நினைத்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை திருப்பி அனுப்பி அது தொடர்பான காரணங்களை குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும். அப்படிதிருப்பி அனுப்பப்படும் மசோதாவை சட்டசபையில் மறுபரிசீலனை செய்து அதில் திருத்தும் செய்து கொண்டு வந்தோ அல்லது திருத்தும் இல்லாமலோ ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அரசு மீண்டும் அனுப்பி வைக்கும்பட்சத்தில் அதன்பிறகு அந்த மசோதாவை ஒப்புதலுக்காக ஆளுநர் நிறுத்தி வைக்க கூடாது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்க கூடாது. இதற்கு மாறாக குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அதை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *