• Wed. Apr 24th, 2024

பெருந்தலைவர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல்

Byகாயத்ரி

Feb 4, 2022

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 28-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்ற நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது.இந்நிலையில், இந்தத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.அதுவும், சுயேட்சை வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வித்தியாசமான முறையில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா போன்று வேடம் அணிந்த கலைஞர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த கோவையின் போத்தனூர் 95-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ராஜசேகர்.இந்த நிகழ்வு மக்களிடையே பெரும் கவனத்தை ஈரத்துள்ளது.பெருந்தலைவர்களுடன் வந்த சுயேட்சை வேட்பாளரால் அங்குள்ள அனைவரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *