காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தொக்க உரையும், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நன்றியுரையும் ஆற்றுகின்றனர். புதிய உறுதியுடன் வெற்றிக்கான பாதையை கண்டறிவதே சிந்தனை அமர்வின் முக்கிய அம்சமாகும். மேலும் எதிர்கால யுக்திகள், பொது பிரச்சனைகள், செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்க கூடும் என தெரிகிறது.உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி அதன்பின்னர் சரிவிலிருந்து மீள்வதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில் வரும் மாதங்களில் குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் திட்டங்களை வகுக்க இந்த அமர்வின் கூட்டம் ஆலோசனைகளை வழங்கும் என சொல்லப்படுகிறது.