இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, நுழை வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறிய மனுவிற்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோவில் வளாகங்ககோவில்களில் அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா? ஆலய பிரவேச சட்டப்படி, இந்துக்கள் அல்லாதோர், வெளிநாட்டவர்கள் கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விளம்பர பலகை வைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கடந்த 1947ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை எனக் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1970ம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம், 1972ல் ரத்து செய்த போதும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, நுழை வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மேலும், மரபு மற்றும் மதம் சாராத நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்க கூடாது எனவும், கோவில் வளாகங்களில் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கோவில்களில் தின்பண்டங்கள் விற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், கோவில் மரபுபடி உடை அணிந்து வர வேண்டும் எனவும், தஞ்சை, மதுரை போன்ற கோவில்களில் பிற மதத்தவர்கள் லுங்கி, டவுசர் அணிந்து வருவதாகவும், வெளிநாட்டவர்கள் அனுமதிக்க கூடாது என்றும் வாதிட்டார். பல கோவில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நாட்டில் ஹிஜாப், கோவில்களில் வேட்டி ஆகியவற்றுக்காக போராடுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா அல்லது மத ரிதியாக பிளவுபட்டதா என கேள்வி எழுப்பினர்.
அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான மரபு பின்பற்றப்படுகிறதா எனவும், ஆகம சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பிட்ட உடை தான் அணிய வேண்டும் என மரபு உள்ளதா? எந்த கோவிலில் உள்ளது எனத் கேள்வி எழுப்பினர். அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா என நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், அதுசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்றும், அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் ரத்து செய்ததாகவும், பல கோவில்களில் இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய கூடாது என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோவிலில் ஆண் பக்தர்கள், மேலாடை அணிய கூடாது என்ற ஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ளதாகவும் தெரிவித்த தலைமை வழக்கறிஞர், நீதிமன்றம் எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது என்றும், இந்து அல்லாதோர், கொடி மரத்தை தாண்டி கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கும் மரபு இன்னும் பல கோவில்களில் அமலில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்த கூடாது என்றும், இது மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றது என்றும் கூறிய நீதிபதிகள், மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]