• Tue. Apr 22nd, 2025

“அரசியல் டுடே” அன்று சொன்னது இன்று உண்மையானது!!

குமரி சுரேஷ் ராஜான் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராகிறார் என “அரசியல் டுடே ” அன்று சொன்னது இன்று உண்மையானது.

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், உறுப்பினர்கள் கே.எம்.மதுபாலா, எம்.கணேசன், கே.கருணாநிதி, எஸ். பெரியாண்டவர், டி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு சக்கரபாணி, கூட்டுறவு நுகர்வோர் உணவு பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் சத்திய பிரதா சாகு (இ.ஆ .ப) ஆகியோர் உடன் இருந்தனர்.

சுரேஷ் ராஜான் மற்றும் அவருடன் உறுப்பினர் பதவி பெற்றவர்கள் சட்டப்படியான அரசு ஆணைக்கு பின், முதல்வரை சுரேஷ் ராஜான் உட்பட குழுவினர் சந்தித்தார்கள் என்ற தகவல் வந்த அடுத்த நிமிடமே.

வடசேரி அண்ணா சிலை, பேருந்து நிலையம் என பல்வேறு இடங்களில் சுரேஷ் ராஜான் ஆதரவாளர்கள் இனிப்பு கொடுத்ததுடன் பட்டாசு வெடித்து அமர்க்களமாக்கினர்.

இந்த தகவலை நமது தாழை நியூஸ் & மீடியா நிறுவனம் குமரி சுரேஷ் ராஜன் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் ஆவார் என அன்றே கணித்து நமது “அரசியல் டுடே” இணையதளத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தியது. அரசியல் டுடே அன்று சொன்னது இன்று உண்மையானது தான் நிதர்சனம்.