


மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சரும், சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகருமான சுரேஷ்கோபி கன்னியாகுமரி மாவட்டதில் அமைந்துள்ள பழமையான குமார கோயில் முருகன் கோயிலில் குடும்பத்தோடு வேலோடு வந்து சாமிதரிசனம்.

எல்லா மனிதர்களுக்கும் நல்ல சக்தியை கொடுக்க வேண்டும் என பேட்டி,

கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை குமாரகோயிலுக்கு மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ்கோபி தனது மனைவி இரு மகள்கள் ,இரண்டு மகன்கள் , மருமகன் , அம்மா என குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக இந்து அறநிலைய துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். தொடர்ந்து கணபதியை தரிசித்துவிட்டு அருள்மிகு குமார கோவில் முருகனை தரிசனம் செய்தார்.
அப்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறு சிறு வேல்களை காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து அவர் கொண்டு வந்த ஒன்றரை அடி பித்தளை வேலை முருகபெருமான் காலடியில் பூஜை செய்து திரும்ப பெற்று கொண்டார். அர்ச்சகர்கள் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அர்சனை செய்து பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து பக்தர்களும் கோயில் ஊழியர்களும் அவரோடு புகைபடம் எடுத்து கொண்டனர். பாஜக மாவட்ட பொது செயலாளர் பா . ரமேஷ் சார்பாக அவருக்கு முருகர் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர் இரண்டாவது முறையாக குடும்பத்தோடு குமார கோயிலுக்கு வந்து இருப்பதாகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் முருகனை வேண்டி பிராத்தனை செய்து மகிழ்ச்சியாக வீட்டிற்கு செல்கிறோம். செய்யும் வேலைகள் நன்றாக அமைய வேண்டும் மக்களுக்கு தகுந்த வேலைகள் அமையணும் எல்லா மனிதர்களுக்கும் நல்ல சக்தியை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளா வக்ப் சட்ட திருத்தம் அமுல் படுத்தி உள்ளது. இது குறித்த செய்தியாளர் கேள்விக்கு நான் எங்கு இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரிகிறது அல்லவா என்று கூறி விட்டு கடந்து சென்றார்.

