இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை கொண்டுள்ளார் ஜிவி பிரகாஷ் குமார். இதுவரை நார்மல் ரோல்களில் நடித்து வந்த ஜிவி பிரகாஷ் குமார் முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள படம் செல்ஃபி. வெற்றிமாறனின் உதவியாளர் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. தமிழைத் தொடர்ந்து இப்போது தெலுங்கு, பாலிவுட்டில் அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஜிவி பிரகாஷ் குமார் தான் திரைத்துறையில் அறிமுகமாகும் போது பலரும் என்னை கிண்டல் செய்தார்கள். என்னுடைய திறமையை பார்க்காமல் Relatives – னால நான் ஈஸியா சினிமாவுக்கு வந்துவிட்டேன் என பலரும் கூறினார்கள் ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் என்னுடைய வேலையில் மட்டும் முழு மூச்சாக பணியாற்றினேன் இப்பொழுது என்னை பற்றி நெகட்டிவ்வாக பேசியவர்களே என்னுடைய நடிப்பைப் பார்த்து பாராட்டுகின்றனர் எனக் கூறியுள்ளார்.