
மழை வரம் வேண்டியும் கழுதை இனங்களை பாதுகாக்கவும் நடைபெற்ற பஞ்ச கல்யாணி ஓட்டப்பந்தயம்
மதுரை மாவட்டம் சிந்தாமணி சின்ன அனுப்பானடி பகுதியில் சலவை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 34 ஆம் ஆண்டு விழா, வெள்ளாவி பொங்கல் விழா பஞ்ச கல்யாணி (கழுதை) ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.

பழைய துணிகளை பொதிகளாக சுமக்கும் கழுதை இனங்கள் சலவைத் தொழிலாளர்களின் முக்கிய ஆதராமாக விளங்குகிறது. ஆனால் வாஷிங் மெஷின் என்று நவீன தொழில்நுட்பத்தின் தற்போதைய காலகட்டத்தில் கழுதை இனங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் கழுதை இனங்களை பாதுகாக்கவும் மழை வரம் வேண்டியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பஞ்ச கல்யாணி என்ற கழுதை ஓட்டபந்தயம் நடைபெற்றது.
பொட்டபாளையம் முதல் பனையூர் பிரிவு வரை நடைபெற்ற இந்நிகழ்வில் தூத்துக்குடி அருப்புக்கோட்டை விருதுநகர் சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கழுதைகள் பொதிகளை சுமந்து ஓடி வந்தன.

வெற்றி பெற்ற கழுதைகளுக்கும் கழுதை உரிமையாளர்களுக்கும் குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாரியப்பன் ஈஸ்வரன் முத்துக்குமார் ரஜினிகண்ணன் தலைமையில் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
