
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ளும் மதுரை முன்னாள் மேயர் சிலை திறப்பு விழா மற்றும் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை வந்தடைந்தார்.

மதுரையில் முன்னாள் மேயர் முத்து சிலை திறப்பு விழா மற்றும் நாளை நடைபெறக்கூடிய திமுக கட்சி பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக முதல்வர் இரண்டு நாள் பயணமாக மதுரைக்கு வருகை
முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் தங்கம் தென்னரசு மூர்த்தி பி டி ஆர் தியாகராஜன் பெரிய கருப்பன் ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மதுரை மாநகராட்சி ஆணையர்,மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த்ம் மற்றும் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கார் மூலமாக மதுரை பெருங்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்குகிறார்.

மாலை தனியார் ஹோட்டலில் இருந்து வேன் மூலமாக மதுரை முக்கிய வீதிகளில் சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் ரோட் ஷோ (சாலையில் மக்கள் சந்திப்பு) நடைபெறுகிறது.
மதுரை பெருங்குடி அம்பேத்கர் சிலை, அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலை, பெரியார் சிலை, ஜெய விலாஸ் சந்திப்பு,ஜெய் ஹிந்திபுரம். பழங்காநத்தம் பைபாஸ்ரோடு , காளவாசல் ஆரப்பாளையம் ஜெயில் ரோடு வழியாக சென்று மதுரை முன்னால் மேயர் முத்துவின் வெங்கல சிலையை திறந்து வைக்கிறார்.
மதுரை மாணவரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய ரோடு ஷோ சுமார் 18. கிலோமீட்டர் நடை பெறுகிறது.
