• Tue. Nov 10th, 2026

ஜல்லிக்கட்டு தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Nov 10, 2026

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் ஆய்வு செய்தார்

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் அன்று தைத்திருநாள் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரம் பகுதியில் நடைபெறுவது வழக்கம்

அவனியாபுரம் மாநகராட்சி பகுதிக்குள் உட்பட்டதால் ஜல்லிக்கட்டு போட்டியினை மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி தைத்திருநாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதிகளில் ஆய்வு செய்தார்.

ஜல்லிக்கட்டு விழாவிற்கான மேடை பரிசு பொருள் வழங்கும் இடம் காளைகள் பரிசோதனை செய்யும் இடம் பள்ளிவாசலுக்கு வரும் இடம் அதன் பின் பங்குபெறும் மாடுபிடி வீரர்கள் பரிசோதனை முகாம் ஜல்லிக்கட்டு காளை பரிசோதனை முகாம் ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் மையம், காயம் பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கும் அவசர சிகிச்சை மையம்,

ஜல்லிக்கட்டு பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் கால்நடைகளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள்

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இரண்டு நாட்களில் வாகனங்கள் வரும் வழிகளில் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான வாகனங்கள் நுழைவு இடங்கள்ஆகிய விவரங்களை கேட்டு அறிந்தார்.

பரபரப்புக்கு பெயர் போன மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிதுவக்கம் குறித்து ஜனவரி 7ஆம் தேதி எட்டாம் தேதி தான் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டு அதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார்.