• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

வாய் பேச முடியாதவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கைகளால் சைகை காட்டி ஆர்ப்பாட்டம்..,

Byமுகமதி

Jul 27, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாய் பேச முடியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பலரும் பட்டதாரிகளாக ஆகியிருந்தாலும் வாய் பேச முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தங்களது கைகளால் சைகை காண்பித்து கண்டன ஆர்ப்பாட்டம் எழுப்பினார்கள்.

இது குறித்து அவர்கள் சைகைகளால் காண்பித்ததிலும் அவர்களது மொழியை புரிந்து கொண்ட ஒரு நபர் கூறிய விவரங்களின் அடிப்படையிலும் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி இருக்கும் மனுவின் அடிப்படையிலும் அரசு இவர்களுக்கு வழங்கி இருக்கும் வீட்டுமனை நிலங்களிலும் விவசாய நிலங்களிலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் இவர்களது நிலங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகின்றன. அது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு உடனடியாக அதிகாரிகள் உதவி செய்வதில்லை.

இவ்வாறு வாய் பேச முடியாமல் இருப்பவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களது புகார்களை காவல்துறை போன்ற அலுவலகங்களில் உடனடியாக எடுத்துக் கொள்வதில்லை அதைக் கண்டு கொள்வதுமில்லை. அதற்கு மாறாக இவர்களுக்கு எதிர்த் தரப்பாக இருப்பவர்களில் புகார்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் வாய் பேச முடியாதவராக இருக்கும் நிலையில் காவல்துறை இவர்கள் மீது தான் குற்ற நடவடிக்கை எடுக்கின்றன. அதற்கு வாய் பேச முடியாதவர்களின் மொழி தெரிந்தவர்கள் உதவி கொண்டு விசாரணை நடத்தினால்தான் உண்மை நிலவரம் தெரியவரும். வாய் பேச முடியாத நிலையில் இருக்கும் பலரையும் பெற்றோரே வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடும் அவலமும் இருக்கிறது.

அதை போக்குவதற்கு பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே வாய் பேச முடியாத, காது கேளாதோரின் கோரிக்கைகளை சரியான முறையில் விசாரிப்பதற்கு காவல்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட முக்கியமான துறைகளில் சைகை மொழி பெயர்ப்பாளர்கள் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும்.
இவர்களுக்கு சிறப்பு வீடுகள் அல்லது வீட்டு மனைகள் இலவசமாக தமிழக அரசு வழங்க வேண்டும் அதற்கு எந்த விதமான கட்டணமும் வசூலிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டத்திற்கு பிறகு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவும் வழங்கி இருக்கிறார்கள். வாய் பேச முடியாத ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.