• Mon. Dec 2nd, 2024

வந்தாச்சு..வந்தாச்சு.. வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..!

Byகுமார்

Sep 27, 2021

ஸ்மார்ட்போன் இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் இப்போது ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதற்காகவே பேடிஏம், கூகுள் பே, போன் பே போன்ற ஆப்கள் வந்துவிட்டன.

பணப் பரிவர்த்தனை செய்வதற்கு தனியாக ஒரு ஆப் வைத்திருப்பதை விட ஏற்கெனவே இருக்கும் வாட்ஸ் ஆப்பிலேயே பணம் அனுப்புவது இன்னும் ஈசியாக இருக்கும் அல்லவா?
சமீபத்தில்தான் வாட்ஸ் ஆப் மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

டெஸ்டிங் அடிப்படையில் இந்த வசதி நிறையப் பேருக்கு வந்துவிட்டது. இதன் மூலமாக வாட்ஸ் ஆப் காண்டாக்ட்டில் உள்ளவர்களுக்கு மிகச் சுலபமாகப் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடாக் மகிந்திரா பேங்க் உள்ளிட்ட வங்கிகள் இந்த வசதியை வழங்குகின்றன. இதைப் பிரபலப்படுத்தும் வகையில், வாட்ஸ் ஆப்பில் மேலும் ஒரு அப்டேட் வரவிருக்கிறது.

அதாவது வாட்ஸ் ஆப் பே மூலமாகப் பணம் அனுப்புபவர்களுக்கு கேஷ் பேக் கிடைக்கும். விரைவில் இந்த வசதி வரவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பேடிஎம் உள்ளிட்ட ஆப்களில் ஆயிரக்கணக்கில் கேஷ் பேக் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்குப் போட்டியாக வாட்ஸ் ஆப் பே வசதியிலும் கேஷ் பேக் சலுகைகள் வரவிருக்கின்றன. ஆன்லைன் ஷாப்பிங் போன்ற வசதிகளும் விரைவில் இதில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

செய்தியாளர் :விஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *