• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கோவை ராயல் கேர் மருத்துவமனையில் இதய அவசர சிகிச்சை மருத்துவப் பயிலரங்கம்..,

BySeenu

Oct 11, 2026

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் இந்திய அவசர மருத்துவச் சங்கம் இணைந்து இதய அவசர சிகிச்சை குறித்த பயிலரங்கம் மற்றும் தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி ராயல் ஃபோரம் அரங்கில் நடைபெற்றது.

ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் க. மாதேஸ்வரன் தலைமை வகித்து பயிற்சி பட்டறை முகாமை துவக்கி வைத்து பேசினார்…

அப்போது பேசிய அவர், இதய நோய் பாதிப்பால் வரும் நோயாளிகளின் நோய் பாதிப்பை கண்டறிந்து விரைவாக செயல்படும்,மருத்துவர்களின் அவசர சிகிச்சைத் திறனை மேம்படுத்தவும், இதய அவசர நிலைகளில் உயிரிழப்புகளைக் குறைக்கும் வகையில் நவீன சிகிச்சை அணுகுமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தப் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்..

குறிப்பாக, மாரடைப்பு, இதயத் துடிப்பு சீரற்ற நிலை, இதயத் தடுப்பு மற்றும் பெருநாடி சார்ந்த அவசர பாதிப்புகளைக் கையாளும் முறைகள் குறித்து அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பயிற்சி வழங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்..

முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் இந்திய அவசர மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீநாத் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிலரங்கத்தை துவக்கி வைத்து பேசினார்..

அப்போது பேசிய அவர், இதய அவசர சிகிச்சையின்போது நோயாளிகளின் பாதிப்புகளை விரைவாகக் கண்டறிந்து, உரிய சிகிச்சைகளை உடனடியாக வழங்குவதன் அவசியம் குறித்து விளக்கமளித்தார்..

தொடர்ந்து நடைபெற்ற பயிலரங்கில் இளம் வயதினருக்கு ஏற்படும் மாரடைப்பு, இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றங்கள், உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் அவசர நிலைகள் மற்றும் நுரையீரல் ரத்தக் குழாயில் ரத்தம் அடைத்தல் போன்ற பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த நபுணர்களுக்கு பயிற்சி அமர்வுகள் நடைபெற்றன.