ரூ.100 கோடி மதிப்பில் ஊரகப் பகுதிகளில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்ப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
பத்தாண்டுகளுக்கு பிறகு நமக்கு நாமே திட்டம் ரூ.100 கோடி மதிப்பில் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டப்பணிகளுக்கான மதிப்பீட்டுத்தொகை மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டடங்கள் இத்திட்டத்தில் கட்டலாம். பாலங்கள் கட்டுதல், சாலைகளை தரம் உயர்த்துதல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைகளையும் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஊரகப்பகுதிகளில் கோரிக்கைகள் அதிகளவு வரப்பெற்றால் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் மக்களுக்கான தேவைகள் அனைத்தும் பொதுமக்கள் ,தன்னார்வலர்கள் பங்கும் இதில் முக்கியமானது.