காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பத்திரிக்கையாளர்களை விமர்சித்த H.ராஜா ஒரு சர்ச்சைக்குரிய நபர். அவர் பேசியது, விமர்சனத்திற்காக உருவாக்கப்படும் கொச்சை வார்த்தை. பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், தொடர்ந்து எந்த இடத்தில் அதிகாரம் இருக்கிறதோ அங்கே லஞ்சம் இருக்கத்தான் செய்யும் என்றவர், இதனை தடுக்க சோதனை, வழக்கு போடுவதால் ஒழிக்க முடியாது. எந்த ஒரு அரசாக இருந்தாலும் வெளிப்படையான முடிவு என்ற சிஸ்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே முடியும் என தெரிவித்தார்.