இந்திய திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஜாம்பவான் சிவாஜி கணேசன். இன்று வரை அவர் நடித்த ஒவ்வொரு படமும் கதாபாத்திரங்களும் பசுமரத்தணி போல் அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ளது. சுமார் 300 திரைப்படங்களில் நடித்த இவர் தாதா சாகேப் பால்கே தொடங்கி சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.
இன்று நடிப்பின் திலகம் சிவாஜி அவர்களின் 93 ஆவது பிறந்த நாள். இதையொட்டி, கூகுள், தனது முகப்பு பக்கத்தில் உள்ள டூடுலில் சிவாஜி கணேசனின் படத்தை வைத்து கவுரவித்துள்ளது.