

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் செயலாளர்கள், நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகுதான் முடிவு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியது சரிதான் எனவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
மேலும், தனிக்கட்சியாக அமமுக செயல்படுவதும், சசிகலா சட்டப்போராட்டம் நடத்தி வருவதும் அதிமுகவை மீட்பதற்காகத்தான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
