ஓ.பி.எஸ்ஸை விமர்சக்க கூட எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது என கே.பி.முனுசாமி பேட்டியளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் புளியஞ்சேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்… ஓ.பன்னீர்செல்வம், எங்களை ஒன்றாக செயல்படலாம் வாருங்கள் என அழைக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. இந்த இயக்கத்திற்கு எந்தவிதமான தியாகமும் செய்யாதவர் .ஓ.பன்னீர்செல்வம். அவர் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர் என கூற நான் கடமைப்பட்டுள்ளேன். அ.தி.மு.க.வில் உள்ள ஒரு தலைவர் நாட்டின் பிரதமர் சொன்னார் என்பதற்காகதான் நான் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என சொன்னால், அவர் எவ்வளவு சந்தர்ப்பவாதியாக இருக்க வேண்டும். அவருக்கு சுயமாக சிந்திக்க தெரிகிறதோ இல்லையோ, சுய நலக்காரராக இருக்கிறார். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நபரை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.