காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். அவரை பதவியில் நீடிக்குமாறு காங்கிரஸ் காரிய கமிட்டி வற்புறுத்திய போதிலும் அவர் ஏற்கவில்லை.
அவர் மறுத்தபோதிலும், அவர்தான் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். நேரு குடும்பத்தை சாராத வேறு நிர்வாகிகளை தலைவர் பதவியில் நியமிக்க முறையான ஆலோசனை எதுவும் நடக்கவில்லை. இந்த குழப்பநிலைக்கு முடிவு கட்ட சோனியாகாந்தியே தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று சில தலைவர்கள் யோசனை தெரிவித்து வருகிறார்கள்.