• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வாக்கு சாவடி மையங்களில் நீர் மோர்:

ByN.Ravi

Apr 20, 2024

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரையின்படி, சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள 19 வாக்குச்சாவடிகளிலும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மாற்றுத்
திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க ஏதுவாக தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டது. மேலும், வெப்ப தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து வாக்களிக்க ஏதுவாக ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் நீர்/ மோர் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் இதனால், சிரமமின்றிவாக்களித்து சென்றனர்.
சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் கண்காணிப்பில் இப்பணிகள் நடைபெற்றது.