• Tue. Jun 30th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

ஒபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு பரபரப்பு…

ByA.Tamilselvan

Jun 23, 2022

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் கூடியது.
கூட்டம் துவங்கியது முதல் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். மேலும் பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கத்தை பேச விடவில்லை. இதனால் கோபமடைந்த ஓபிஎஸ் சட்டத்திற்கு புறப்பான பொதுக்குழு என முழக்கமிட்டு பொதுக்குழுவை புறக்கணித்து வெளியேறினார். அப்போது ஓபிஎஸ் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டிலை கொண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.