நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத் தற்போது Bloody Brothers என்ற வெப் ஷோவில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த வெப் ஷோ வெளியிடப்பட உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகளில் ஜெய்தீப் பிஸியாக இருக்கிறார். அப்படி ப்ரொமோஷனின் போது தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பல அரிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஒருமுறை அமெரிக்காவில் கமல்ஹாசனுடன் சேர்த்து தன்னை கைது செய்து வைத்திருந்த போது தான் தான் மிகவும் பயந்து விட்டதாக அவர் கூறி உள்ளார். இதுகுறித்து ஜெய்தீப் தனது பேட்டியில் கூறுகையில், ‘விஸ்வரூபம் பட ஷுட்டிங்கின் போது, நியூயார்க்கின் Manhattan நகரில் கமல் சாருடன் ஷுட்டிங் நடத்தப்பட்டது. 2013 ம் ஆண்டு அது கிறிஸ்துமஸ் சமயம். பண்டிகை காலம் என்பதால் அமெரிக்கா முழுவதும் உஷார் நிலை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் மூன்று பெரிய SUV கார்களில் பாலத்தின் மீது செல்லும் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தோம்.
ஒரு காரில் என்னுடன் கமல் சாரும் இருந்தார். நாங்கள் அந்த காட்சியை முடிக்காமலேயே சுற்றி, திரும்பி வந்து விட்டோம். மூன்றாவது முறை அந்த டோல்கேட்டை அடைந்த போது எட்டு முதல் 10 போலீஸ் கார்கள் எங்களை சுற்றி வளைத்துக் கொண்டன. கையில் துப்பாக்கியுடன் வந்த அவர்களை பார்த்து கைகளை மேலே தூக்கியப்படி, தயவு செய்து எங்களை சுட வேண்டாம் என கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்தோம். நாங்கள் ஷுட்டிங் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என நீண்ட போராட்டத்திற்கு பிறகே அவர்களுக்கு புரிய வைத்தோம். அது மறக்க முடியாத சம்பவம்!’ என்றார்.
