• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

உலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி!!

ByS. SRIDHAR

Sep 26, 2026

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், அப்போலோ மருத்துவமனை திருச்சி புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் உலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் S.அப்துல் ரகுமான் தலைமையில் பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி கலைஞர் பூங்காவில் நிறைவடைந்தது முன்னதாக வருகை தந்த அனைவரையும் புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் கண.மோகன் ராஜா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.அருணா ரோட்டரி மாவட்ட 3000தின் ஆளுநர் A.லியோ பெலிக்ஸ் லூயிஸ், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் R.மணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி அப்பல்லோ மருத்துவமனை துணைத் தலைவர் V.ஜெயராமன் மேலாளர் ஜெரோம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் AMS இப்ராஹிம் பாபு பொருளாளர் C.பிரசாத் மண்டல ஒருங்கிணைப்பாளர் S கதிரேசன் மேனாள் தலைவர் S.பார்த்திபன் வருங்கால தலைவர் K.ஓம்ராஜ் மேனாள் செயலாளர்கள்

முத்தன் அரசகுமார் R.சங்கர் சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் A.சுப்பையா, அரசு தொழிற்பயிற்சி நிலைய அலுவலர்கள் J.ஜோதிமணி ரமேஷ், புதுகை வெற்றி ரோட்டரி சங்க செயலாளர் SM.அண்ணாமலை முன்னிலை வகித்தனர்.

பேரணியில் சிறப்பு அழைப்பாளர்களாக புதுகை வெற்றி ரோட்டரி சங்கத் தலைவர் A.சோமசுந்தரம் டாக்டர் D.வெங்கடேசன் டாக்டர் M.சுதர்சனன் வீனஸ் கார்ப்பரேஷன் TH.ராஜேந்திரன் அன்னவாசல் அன்னப்பறவை ரோட்டரி சங்கத் தலைவர் MC.சின்னதுரை அரசு மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன் பேராசிரியர் டாக்டர் R.சரவணன், டாக்டர் ராமலிங்கம் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியினை திட்ட இயக்குனர்களாக சேது கார்த்திகேயன் நல்லாசிரியர் விருது பெற்ற க.முத்துராமலிங்கம் முனைவர் கோ.கண்ணன் கவிஞர் புதுகை புதல்வன் செய்திருந்தனர் நிறைவாக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் K.மணிகண்டன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி, JJ.நர்சிங் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம், மன்னர் கல்லூரி, NCC,NSS, VSK.கல்வியியல் கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி, அரசு கல்வியல் கல்லூரி, புத்தாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ், மாணவ மாணவிகள் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.