• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அனைத்து பிள்ளைமார் சங்க இளைஞர் அணி சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர் ,செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 151 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .

ஆண்டிபட்டி பால விநாயகர் கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வ.உ.சி.. யின் பிரம்மாண்டமான படம் வைக்கப்பட்டு அனைத்து பிள்ளைமார் சங்க இளைஞரணி சார்பாக மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் அனைத்து கட்சி நிர்வாகிகள், அமைப்புகளை சார்ந்தோர் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்  தலைமையிலும், அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன் ,வரதராஜன் ஆகியோர் தலைமையிலும் ,தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் ,நாம் தமிழர் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையிலும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வ.உ.சி யின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.