• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும். அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் நூலக அரங்கில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பிரேமா தலைமையேற்று பேசினார். தமிழ் துறை தலைவர் பாலுச்சாமி வரவேற்று பேசினார்.

அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் க.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று மனநலம் என்ற தலைப்பில் பேசினார். முனைவர் விமலா நன்றி கூறினார்.

விழாவில் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் பாலமுருகேஸ்வரி, முனைவர்கள் விமலா, முருகவள்ளி, செல்வி மற்றும் 200-க்கும் மேற்பட்ட இளங்கலை தமிழ் இலக்கிய மாணவர்கள் பங்கேற்றனர். விழாவின் ஏற்பாடுகளை தமிழ்த்துறையினர் செய்து இருந்தனர்.