

இந்தியா முழுவதும் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 22.8 சதவீதம் பேர் உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான மற்ற வாக்குகளில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களின் பங்கு 18 சதவீதம் மட்டுமே இருந்ததாக தேர்தல் ஆணைய புள்ளி விபரபட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 20-ம் தேதி நிலவரப்படி இந்தியாய முழுவதும் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையில் 22.8 சதவீதமாக இருந்தது. அதே சமயம் 60 முதல் 79 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் பங்கு 14.7 சதவீதமாக இருந்தது.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் கேரளாவில் 18 முதல் 29 வயதுடைய இளம் வாக்காளர்களின் பங்கு 18 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது. அதிகபட்சமாக அசாமில் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் 30 சதவீத வாக்காளர்கள் உள்ளனர். இது ஜார்க்கண்டில் 28.4 சதவீதமாக உள்ளது. டெல்லியில் 30 முதல் 59 வயது வரை உள்ள வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

