• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் வீட்டில் முதல் சண்டையும் வி.ஜே .மகேஷ்வரின் ரகளையும்

ByA.Tamilselvan

Oct 13, 2022

பிக்பாஸ் வீட்டில் வி.ஜே.மகேஷ்வரியின் ரகளையால் முதல் சண்டை துவங்கியது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த 9ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ரியோ, ரம்யா பாண்டியன், நிரூப், பிரியங்கா உள்ளிட்ட பலரும் ஆட்டம் ஆடி வரவேற்றனர். இவர்களை தொடர்ந்து வந்த கமல், ”வேட்டைக்கு தயாரா” என்ற முழக்கத்துடன் வீட்டின் உள்ளே சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த இடங்களை சுற்றிக் காட்டினார்.மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த பிரபல யூட்யூபரான ஜிபி முத்து என அறியப்படும் ஜி. பேச்சி முத்து முதல் ஆளாக பிக்பாஸ் போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி 4 நாட்கள் கடந்திருக்கின்றன. இது நாள் வரை ஜி.பி. முத்துவை கிண்டல் செய்வது ,விளையாடுவது என்று கழிந்த வீட்டில் இன்று முதல் முதறாக சண்டை ,அழுகை ஆகியவை நடக்கின்றன. காலை ஆயிஷா ஏதோ சொல்ல ஜி.பி.முத்து அழுத நிலையில் ,இப்போது மகேஷ்வரிக்கும் அசீமுக்கும் சண்டை வெடித்திருக்கிறது. அப்ப இனி தொடர்ந்து சண்டைகளும் , ரகளைகளையும் எதிர்பார்க்கலாம்.